According to The Panchaboodha Treatment, the reasons which causes the neuropathy disease is the movement of muscles associated with the nervous system in that due to combination of male seed vital energy and heat energy associated with solid energy gets increase and start affecting the nervous system. Thus causes pain and stinging in the limbs. As the force increase in the heat energy, the muscles become damaged and the limbs become numbness, and the hands feel enveloped, and that nerve weakness causes the objects hold in the hands begins to slip and fall unnoticed. Later on, there will be permanent pain in the nerve which turns in to severe pain and becomes chronic disease. Then in the course of the day there is a state of permanent forgetfulness and complete loss of emotions. Similarly, Internal Organs associated with nervous system gets affected especially the heart, blood vessels, intestinal tract and urinary bladder. There is a way in the Panchaboodha Pulses to find the causes of this neurological disease and can be treated to cure completely.
பஞ்சபூத மருத்துவத்தின் கூற்றின் படி நியூரோபதி நோய் உருவாக காரணம் தசைகளின் இயக்கத்துடன் தொடர்புடைய நரம்புமண்டலங்களில் ஆண் உயிர்ஆற்றல் சக்தியும் , திட சக்தியுடன் தொடர்புடைய வெப்ப சக்தியும் ஒன்று சேர்த்து அதிகரித்து தாக்குவதால் நரம்பு மண்டலங்களில் வெப்ப சக்தி அதிகரிக்கிறது. இதனால் கைகால்களில் வலி , குத்தல்வலி தோன்றுகிறது. இந்த வெப்ப சக்தியின் பாதிப்பு அதிகரிக்கும் போது தசைகளில் பாதிப்பு உண்டாகி கைகால்களில் மறத்து போகுதல் , கைகளில் உறை போட்டது போன்ற உணர்வு தோன்றி நரம்புகளின் பலவீனத்தால் கைகளில் உள்ள பொருள்கள் நம்மை அறியாமல் கைநழுவி கீழே விழுவது போன்ற செயல்கள் நடைபெறுகிறது. மேலும் நாள்பட்ட வியாதியில் நரம்புகளில் நிரந்தரமாக வலி உண்டாகி பின்னர் கடுமையான ,தீவிரமான வலியாக மாற்றமடைகிறது. பின்னர் நாளடைவில் நிரந்தரமாக மறத்து போகுதல் மற்றும் முற்றிலும் உணர்ச்சிகள் அற்றுப் போகும் நிலை உண்டாகிறது. இதே போல இந்த நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய உள் உறுப்புகளிலும் குறிப்பாக இருதயம் , இரத்தகுழாய்கள் , குடல் பகுதிகள் , சிறுநீர் பை போன்றவற்றில் பாதிப்புகள் உண்டாகிறது. இந்த நரம்புமண்டல நோயின் காரணங்களை பஞ்சபூத நாடிகளின் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.